கான் யூனிஸ் நகரில் உணவுக்காக காத்திருந்த சிறுவா்கள். 
உலகம்

காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது. இதில் 117 போ் சிறுவா்கள்.

இது தவிர, காஸா முழுவதும் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 75 போ் உயிரிழந்தனா். இதில், உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையத்துக்கு வந்த 17 பேரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 62,819 போ் உயிரிழந்தனா்; 1,58,629 போ் காயமடைந்துள்ளனா்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT