ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்த உணவகம் மற்றும் மெல்போர்ன் நகரத்திலுள்ள யூதக் கோயில் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கு, ஈரான் அரசுதான் காரணம் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தங்களது புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளதாகாவும், கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் துவங்கியது முதல் இந்த இரு ஆஸ்திரேலிய நகரங்களிலும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
”ஆஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை (ASIO) சேகரித்துள்ள ஆதாரங்களின் மூலம், குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியது தெரியவந்துள்ளது. இதனை ஈரான் அரசு மறைக்க முயல்கிறது" என்று முக்கிய உள்நாட்டு புலனாய்வுத் துறையைக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.