இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற நேரடி சண்டையை தடுப்பதில் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டுமொரு கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “நான் மிகவும் பயங்கரமான மனிதரான இந்திய பிரதமர் மோடியிடம் பேசுகிறேன். பாகிஸ்தானுக்கும் உங்களுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது.
அதன்பின்னர், பாகிஸ்தானிடமும் வர்த்தகம் குறித்து பேசினேன். உங்களுக்கும் இந்தியாவுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே வெறுப்பு மோசமாகிக் கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாகவே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. நான் உங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. உங்கள் இரண்டு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர்தான் ஏற்படப்போகிறது. எனக்கு நாளை அழையுங்கள் என்றேன்.
ஆனால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்யப் போவதில்லை. மேலும், வரியையும் அதிகளவில் உயர்த்தப் போகிறேன். இதனால், உங்கள் தலைதான் சுற்றப் போகிறது.
இவ்வாறு கூறியதும் சுமார் ஐந்து மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்துவிட்டது.இப்போது அது மறுபடியும் தொடங்கலாம்.
எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி நடந்தால் நான் அதை(போர்) மீண்டும் நிறுத்துவேன். இவ்வாறு போர் ஏற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது.
ஆனால், துவக்கத்திலிருந்தே இந்தியா - பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இதுவரை 40 முறைக்கும் மேல் கூறியிருக்கும் டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா எந்தவிதமான எதிர்கருத்தும் கூறவில்லை.
இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களாக பிரதமர் மோடியை 4 முறை அதிபர் டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்ததாக ஜெர்மன் செய்தி வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.