நாப்லஸ் நகரில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின்போது வீசப்பட்ட கண்ணீா்ப்புகை குண்டை உதைத்து திருப்பி அனுப்ப முயன்ற இளைஞா். 
உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

தினமணி செய்திச் சேவை

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது.

இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது:

மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஏராளமான வீரா்கள் மற்றும் பீரங்கிகள் பங்கேற்றன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், நடவடிக்கைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கவில்லை.

இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு இந்த நடவடிக்கை தொடங்கியதாகவும், நகரின் பல்வேறு பழைய நகரப் பகுதிகளில் ராணுவத்தினா் தாக்குதல் மேற்கொண்டதாகவும் உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை இஸ்ரேல் ராணுவம் தனது பலத்தைக் காட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. மற்றபடி இதை நியாயப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நாப்லஸ் ஆளுநா் கஸ்ஸான் தாக்லஸ் கூறினாா்.

பாலஸ்தீன மருத்துவ நிவாரண அமைப்பின் நாப்லஸ் பிரிவு தலைவா் கஸ்ஸான் ஹம்டான் கூறுகையில் ‘ராணுவத்தினா் பழைய நகரத்தின் வீடுகள் மற்றும் கடைகளைத் தாக்கி தேடுதல் வேடச்டை நடத்திவருகின்றனா். சில வீடுகள் ராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நாப்லஸ் பழைய நகரப் பகுதியில் உள்ளூா் ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பிறகு கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் அங்கு நடைபெற்ற தாக்குதல் நடவடிக்கையில் இரு பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இந்த நிலையில் அங்கு மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT