டிட்வா புயலால் இலங்கையில் பாதிப்பு! AP
உலகம்

டிட்வா புயலால் இலங்கையில் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!

டிட்வா புயலால் இலங்கையில் 14 லட்சம் பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கொழும்பு: டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 14 லட்சம் பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பல டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்து இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த் நிலையில், டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இலங்கையில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை(டிச. 2) நிலவரப்படி 390-ஆகவும், மாயமானோரின் எண்ணிக்கை 352-ஆகவும் உள்ளது.

300,000 children feared affected by Cyclone Ditwah in Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

யு19 உலகக் கோப்பை: பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து; 136 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

77வது குடியரசு நாள் விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT