இலங்கைக்கு பாகிஸ்தான் உதவி செய்வதில் இந்தியா தடையை ஏற்படுத்துகிறது என்று பாகிஸ்தான் அரசு விமர்சித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 14 லட்சம் பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல இந்திய வான் வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதிக்கவில்லை. இதனை முதன்மைக் குற்றச்சாட்டாக சுமத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. எனினும், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து திங்கள்கிழமை(டிச. 2) பகல் 1 மணியளவில் இந்தியாவிடன் வான் வெளியைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதனை பரிசீலித்த மத்திய அரசு மாலை 5.30 மணியளவில் பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவை விமர்சிக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் ஊடகங்கள் திட்டமிட்டே இந்திய அரசு பாகிஸ்தானுக்கு வான் வெளியைப் பயன்படுத்த அனுமதியளிக்காமல் நிராகரித்திருப்பதாக வதந்திகளைப் பரப்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.