அடுத்த சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத பெரியளவிலான போர் நிகழும் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களால் போர்கள் இல்லாமல் போனதாகவும், போர் இல்லாததால் வல்லரசுகளும் பயனற்றதாகப் போனதாகவும் எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்டதற்கு எலான் மஸ்க் பதிலளித்தார்.
எலான் மஸ்க் தெரிவித்த பதில் பதிவில், ``போரை தவிர்க்க முடியாது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகளில்..’’ என்று தெரிவித்தார்.
2030 முதல் 2035-க்குள்ளாக போர் நிகழும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தாலும், அதற்கான காரணத்தையும் யாருக்கிடையே போர் நிகழும் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.
பல நாடுகளும் தற்போது தங்களின் ராணுவத்தை வலிமைப்படுத்தி வரும்நிலையில், எலான் மஸ்க்கின் போர் எச்சரிகை சமூக ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதங்களுக்கான போராக இருக்குமா? செய்யறிவு குறித்த போரா? தங்கத்தின் மீதான போராக இருக்குமா? என்றெல்லாம் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க: பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.