உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் மக்களுக்கு ஏர் சைரன் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷியாவிலிருந்து அனுப்பப்பட்ட 653 ட்ரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகளில் 585 ட்ரோன்களையும் 30 ஏவுகணைகளையும் இடைமறித்து செயலிழக்கச் செய்திருப்பதாகவும் உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா வான் வழி தாக்குதல்களைத் தொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களில் 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்காண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் உக்ரைன் - ரஷியா போரை மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டும் நிலையில், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் உயர்நிலை அதிகாரிகள் குழு மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் ஃப்ளோரிடாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இதனிடையே, உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர வான் வழி தாக்குதல்களைத் தொடுத்திருப்பதால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.