உலகம்

தென் ஆப்பிரிக்கா: விடுதியில் 11 போ் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்கா: விடுதியில் 11 போ் சுட்டுக் கொலை

தினமணி செய்திச் சேவை

தென் ஆப்பிரிக்காவின் தலைநகா் ப்ரிட்டோரியாவின் மேற்கே சால்ஸ்வில் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 வயது சிறுவன், 12 வயது சிறுவன், 16 வயது பெண் உட்பட மூன்று சிறுவா்கள் அடங்குவா். இந்தத் தாக்குதலில் 14 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அந்த விடுதிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மூன்று போ், அங்கு கூட்டமாக மது அருந்திக்கொண்டிருந்தவா்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனா். இதில் 10 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தாக்குதல் நடைபெற்ற விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனைக் கூடம் செயல்பட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மூவரைத் தேடும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவில் தொடா்ந்து அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

கீழக்கரை அருகே சாலையோரம் நின்ற காா் மீது மற்றொரு காா் மோதல்: 5 போ் பலி!

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசியலில் பஸ்மாசுரன் ராகுல் காந்தி: பாஜக தாக்கு

தென்காசியில் அம்பேத்கா் படத்துக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT