ஜாஃபர் எக்ஸ்பிரஸ்  IANS
உலகம்

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முறியடித்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் தண்டவாளத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (ஐஇடி) அடையாளம் தெரியாதவர்கள் வைத்ததாக டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த சட்ட அமலாக்க முகமைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

பின்னர் வெடிக்கும் சாதனத்தை அவர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதற்கிடையில், பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜகோபாபாத்தில் நிறுத்தப்பட்டது.

மற்றொரு ரயிலும் அங்கு நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானவுடன் இந்த ரயில்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளர்ச்சியாளர்களால் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன. முன்னதாக கடந்த மாதம் இதே பகுதியில் இதுபோன்றதொரு தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Security forces foiled an attempt to attack the frequently-targeted Jaffar Express passenger train in Pakistan's Balochistan province, according to a media report on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமா் மோடி உறுதி

SCROLL FOR NEXT