இந்தோனேசிய அதிபர் சுபியந்தோ Center-Center-Chennai
உலகம்

பாகிஸ்தான் - இந்தோனேசியா இடையே பல்வேறு துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

பாகிஸ்தான் - இந்தோனேசியா பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்திட வலியுறுத்தல்...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் பாகிஸ்தானின் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பல்வேறு துறைகளில் செவ்வாய்க்கிழமை(டிச. 9) 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. உயர்கல்வி, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, போதைப்பொருள் கட்டுப்பாட்டு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், ஹலால் வர்த்தகம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், வர்த்தகம், கலாசாரம், தொழிற்பயிற்சிக் கல்வி துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

இதனிடையே, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஆசிம் முனீரையும் சுபியந்தோ சந்தித்துப் பேசினார். அப்போது, பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, இருநாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்திட இருதரப்பும் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan, Indonesia ink 7 MoUs to bolster cooperation as PM Shehbaz holds talks with Prez Subianto

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

புதிய தொடக்கம்... ராதிகா ஆப்தே!

நில்லாமல் வீசிடும் பேரலை... பயல் ராதாகிருஷ்ணா!

கலவர வழக்கு: ராஜ் தாக்கரே தாணே நீதிமன்றத்தில் ஆஜர்!

SCROLL FOR NEXT