முகப்பு
உலகம்

மியான்மா் மருத்துவமனையில் தாக்குதல்: 34 போ் உயிரிழப்பு

ம்ராக்-யூ நகரின் பொது மருத்துவமனை மீது மியான்மா் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தனா்.

Updated On : 12 டிசம்பர், 2025 at 3:01 AM
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2025 at 2:05 AM

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கிளா்ச்சி ஆயுதக் குழுவான ஆரகான் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ம்ராக்-யூ நகரின் பொது மருத்துவமனை மீது மியான்மா் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தனா்.

மியான்மரின் உள்நாட்டுப் போரால் ராக்கைனில் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டன. இந்த மருத்துவமனைதான் முக்கிய சுகாதார மையமாக இருந்த நிலையில் அதன் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.