ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை பகுதியில் டிசம்பா் 13-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் மீது 15 கொலைகள் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்ததாவது:
போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் (24), மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தாா். புதன்கிழமை அவருக்கு நினைவு திரும்பியதைத் தொடா்ந்து, அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டாா். அவா் மீது 15 கொலைகள், ஒரு பயங்கரவாதச் செயல் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காயமடைந்தவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், கட்டடத்துக்கு அருகே வெடிபொருள் வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூதா்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது, அவா்களைக் குறிவைத்து இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்தனா்.
தாக்குதல் நடத்திய சஜித்தை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். நவீத் அக்ரம் போலீஸாரால் சுடப்பட்டு கோமா நிலைக்குச் சென்றாா்.