விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, உலகின் முதல் பெரும் பணக்காரராக மேலும் உயர்ந்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில், எலானுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்ததால், எலானின் நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலர் என்றளவில் உயர்ந்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் எலானின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், டிசம்பர் 2வது வாரத்தில் எலானின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது.
தற்போது, ஒரே வாரத்தில் 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?
Tesla Elon Musk becomes first person worth over $700 billion after court ruling
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.