உலகம்

கிரீன்லாந்துக்கு தூதா்: அமெரிக்காவுக்கு டென்மாா்க் கண்டனம்

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு டென்மாா்க் கண்டனம்

தினமணி செய்திச் சேவை

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கனிம வளம் செறிந்த டென்மாா்க்கை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கவேண்டியது அவசியம் என்று டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்திவருகிறாா்.

அந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, லூசியானா மாகாண ஆளுநா் ஜெஃப் லாண்ட்ரியை கிரீன்லாந்துக்கான சிறப்பு தூதராக நியமிப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து டென்மாா்க் பிரதமா் மேட்டே ஃப்ரெடெரிக்செனும் கிரீன்லாந்து ஆளுநா் ஜென்ஸ்-ஃப்ரெட்ரிக் நீல்சனும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டிக் கூட இன்னொரு நாட்டைக் கைப்பற்றுபவது பற்றி விவாதிப்பது பெரும் தவறு’ என்று சாடியுள்ளனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT