நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்! 5 பேர் பலி; பலர் படுகாயம்! போகோ ஹராம் சதி?
நைஜீரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டது குறித்து...
நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், நேற்று (டிச. 24) இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான தடயங்கள் மற்றும் வெடி குண்டுகளின் கருவிகள் கிடைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, நைஜீரியாவில் நடைபெறும் பெரும்பாலான தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலையும் அந்த அமைப்பின் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படத்தின் பாலஸ்தீன இயக்குநர் காலமானார்!
In Nigeria, it has been reported that 5 people were killed in a bomb attack at a mosque.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.