கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில் மீண்டும் போர்நிறுத்தம்... AP
உலகம்

கம்போடியா - தாய்லாந்து இடையே புதிய அமைதி ஒப்பந்தம்! மீண்டும் போர்நிறுத்தம் அமல்!

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில் மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது...

இணையதளச் செய்திப் பிரிவு

கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளிடையே நடைபெற்று வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில், நீண்டகாலமான எல்லைப் பிரச்னை நிலவி வருகின்றது. இதையடுத்து, இருநாடுகளின் எல்லையில் கடந்த ஜூலை மாதம் கன்னிவெடித் தாக்குதலில் 5 வீரர்கள் படுகாயமடைந்ததால் கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் 5 நாள்களுக்கு மோதல் வெடித்தது. பின்னர், மலேசியா அரசின் முயற்சியால் கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

வர்த்தக உறவுகள் நீடிக்க வேண்டும் என்றால் அமைதி ஒப்பந்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிச.7 ஆம் தேதி முதல் கம்போடியா மற்றும் தாய்லாந்தின் ராணுவப் படைகள் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன. இதனால், எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்தப் புதிய மோதல்களால், தாய்லாந்தில் 26 வீரர்கள் மற்றும் 44 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டனர். கம்போடியாவில் கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கைகள் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், 30 பேர் பலியானதுடன் 90-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கம்போடியா மற்றும் தாய்லாந்து அரசுகள் இன்று (டிச. 27) போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 72 மணிநேரத்திற்கு இந்தப் போர்நிறுத்தம் நீடித்தால், தாய்லாந்து சிறைப்பிடித்துள்ள கம்போடியாவின் 18 வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இன்று காலை வரை கம்போடியா மீது தாய்லாந்தின் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கம்போடியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோயிலை உரிமைக்கோரி இருநாடுகளும் மோதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போதுமே விஜய்யின் ரசிகைதான்..! மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள்! - கோபமடைந்த மெஹபூபா முஃப்தி

துரந்தர் வில்லன் அக்‌ஷய் மீது த்ரிஷ்யம் தயாரிப்பாளர் வழக்கு!

2025 அறிமுகம்: எஸ்ஐஆர் புதிய நடைமுறையா? சாதகமா, பாதகமா?

2 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருக்கும் ஆசிப் அலியின் படம்! வெளியீடு எப்போது?

SCROLL FOR NEXT