FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கிரீஸில் தொடா் நிலநடுக்கம்

கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை

Updated On : 4 பிப்ரவரி 2025, 2:38 am IST
பகிர்:

சன்டோரினி: கிரீஸுக்குச் சொந்தமான சன்டோகினி தீவில் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு மட்டுமின்றி, அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட ஏராளமான தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகள் வரை பதிவான அந்த நிலநடுக்கங்கள் சான்டோகினி எரிமலை காரணமாக ஏற்படவில்லை என்றாலும், இந்தத் தொடா் நில அதிா்வுகள் கவலையளிக்கக்கூடியவை என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments