டொனால்ட் டிரம்ப் ஜூனியர் கோப்புப் படம்
உலகம்

டிரம்ப் மகனுக்கு சிறைத் தண்டனை வழங்கும் இத்தாலி?

பாதுகாக்கப்பட்ட உயிரிகளை வேட்டையாடிய டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியர், கடந்த டிசம்பர் மாதம் இத்தாலியில் வெனிஸ் மாகாணத்தில் உள்ள காம்பக்னா லூபியா நகரின் பாதுகாக்கப்பட்ட ஏரியில் பாதுகாக்கப்பட்ட வாத்து இனங்களை வேட்டியாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விடியோவில், 6 பறவைகளை வேட்டையாடிருப்பது போன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடியோ வைரலான நிலையில், இத்தாலிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் பறவை இனங்களை, குறிப்பாக சிவப்பு ஷெல்டக் வகை வாத்தை வேட்டையாடியதற்காக டிரம்ப் ஜூனியர் மீது ஐரோப்பிய பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரியா சனோனி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும், ``இத்தாலி, டிரம்ப் ஜூனியரின் கொல்லைப்புறமாக மாறியதுபோல இருக்கிறது. இத்தாலி, அமெரிக்காவின் சொத்து அல்ல; இத்தாலியை அமெரிக்காவால் ஆட்சி செய்ய முடியாது’’ சனோனி கூறினார். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட பகுதியில் தாங்கள் வேட்டையாடுவதற்கு அனுமதி பெற்றிருந்ததாகவும் டிரம்ப் ஜூனியர் தரப்பில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, டிரம்ப் ஜுனியர் மீதான வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று இத்தாலிய நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், டிரம்ப் ஜூனியருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டுமே விதிக்க நேரிடலாம்.

இத்தாலியில் வேட்டையாடுபவர்கள் கண்டிப்பாக அந்நாட்டில் வசிப்பவர்களாகத்தான் இருக்கவேண்டும். அல்லது தனியார் வேட்டைப்பகுதிகளில்தான் வேட்டையாடுதல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT