கௌதமாலா நாட்டில் சாலை விபத்தில் 51 போ் பலியாகியுள்ளனர். 
உலகம்

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

கௌதமாலா நாட்டில் சாலை விபத்தில் 51 போ் பலியாகியதைப் பற்றி...

Din

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா்.

தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த ஏராளமான வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று தொடா்ச்சியாக மோதின. இந்த விபத்தில் பேருந்து மட்டும் பாலத்தில் இருந்து 115 அடி (35 மீட்டா்) ஆழத்தில் இருந்த கழிவுநீா் ஓடையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.

இதில் பலியான 51 பேரில் குழந்தைகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபா் பொ்ணாா்டோ அரேவலோ, இதற்காக அந்நாட்டில் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளாா்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT