கோப்புப்படம் Din
உலகம்

பாகிஸ்தானில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து குவாசி அகமது காவல் அதிகாரி வசீம் மிர்சா கூறுகையில், ஜாம்ஷோரோ மாவட்டத்தின் செஹ்வான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் சன்னதிக்கு வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வேன் முதலில் ஒரு கழுதை வண்டி மீது மோதியது. அதைத்தொடர்ந்து எதிர்புறத்தில் இருந்து வந்த டிரெய்லருடனும் மோதியது.

மற்றொரு விபத்தில், மாகாணத்தின் கைர்பூர் மாவட்டம், ராணிபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகினர்.

இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்

35 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புரேவாலாவில் இருந்து வந்த பேருந்து ரிக்ஷா மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியான பயணிகள் அனைவரும் பஞ்சாபின் புரேவாலாவைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட முக்கிய காரணங்களால் பாகிஸ்தான் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

ஸ்பிக் நிறுவனம் சாா்பில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி

SCROLL FOR NEXT