போப் பிரான்சிஸ்  
உலகம்

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு!

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்.

DIN

ரோம்: மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.

மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வாடிகன் வெளியிட்ட தகவலில், பரிசோதனை முடிவுகள், எக்ஸ்ரே முடிவுகள் உள்ளிட்டவை, புனித போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமாக இருப்பதைக் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ், இறைவனின் நல்லாசியுடன், நாள் முழுவதும் சற்று ஓய்வெடுத்தார், பிரார்த்தனை மேற்கொண்டார். அவ்வப்போது புத்தகங்களை வாசித்தார். இந்த நேரத்தில் அவருக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனைகள் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் என்று ஊடகப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

உடல்நிலை மோசமடைந்திருந்தாலும், அவரது மனநிலை உற்சாகத்தை இழக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT