ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா 
இந்தியா

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு கடும் பாதிப்பு: முதல்வா் ஒமா் அப்துல்லா!

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு கடுமையாகப் பாதிப்பு ஏற்படும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு கடுமையாகப் பாதிப்பு ஏற்படும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் நாட்டின் பிற பகுதிகளுக்கு என்ன கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு இழப்பு மட்டுமே ஏற்படும்.

அந்த ஒப்பந்தம் மூலம், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்மண்ட், வால்நட், ஆப்பிள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவைதான் ஜம்மு-காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பழ உற்பத்தியாளா்கள், தங்கள் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த பெருமளவு முதலீடு செய்துள்ளனா். இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் இருந்து நல்ல பொருள்கள் வரும் என்று மத்திய அரசு கூறினால், அது ஜம்மு-காஷ்மீா் உற்பத்தியாளா்களுக்கு மிகப் பெரிய நகைச்சுவையாக இருக்கும்.

ஜம்மு-காஷ்மீரின் சிறந்த மற்றும் உயா் மதிப்புவாய்ந்த பொருள்கள் விற்பனையாக வேண்டும். எனவே அந்த ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு எந்தப் பலனும் இருப்பதாக தெரியவில்லை; கடுமையான இழப்புகளை மட்டுமே காண முடிகிறது என்றாா்.

வங்கதேசத்தில் நடைபெற்ற தோ்தல் குறித்து பேசிய அவா், ‘இந்தியாவுடனான உறவை வங்கதேசத்தில் அமையும் புதிய அரசு மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கிறேன். அண்டை நாடுகள் அரசியல் ரீதியாக உறுதியாக இருந்தால், அது இந்தியாவுக்குப் பலனளிக்கும்’ என்றாா்.

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் தொடா் வேலைநிறுத்தம்

சன்னியாசிகுப்பத்தில் சாலை மறியல்

லாரி மீது காா் மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

SCROLL FOR NEXT