நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
பிகார் மற்றும் வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று(ஜன. 7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது.
லோபுச்சேவின் வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சீனாவின் திபெத் பகுதிக்குள்பட்ட பகுதியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன் அதிா்வுகள் காத்மாண்டு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இந்தியாவில் பிகார் மற்றும் வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.