ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக வாடகைக்கு செல்லும் நபர் ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.
ஆனால், பாலியல் செயல்பாடுகள், காதல் துணையாக ஒருபோதும் அவர் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானைச் சேர்ந்த 41 வயது ஷோஜி மோரிமோட்டோ என்பவர் 2018 ஆம் ஆண்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்பிறகு எந்த வேலைக்கும் செல்லாத அவர், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக செல்வதன் மூலம் ஆண்டுக்கு 80,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.69 லட்சம்) சம்பாதித்து வருகிறார்.
தனிமையில் இருப்பவர்களுக்கு உரையாடும் நபராகவும், நட்பை நாடுபவர்களுக்கு வாடகை நண்பராகவும் செல்லும் பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்துள்ளார் ஷோஜி.
மேலும், ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும்போது பேச்சுத் துணைக்காக நேரில் செல்வது, விடியோ காலில் அவர்களுடன் உரையாடுவது, இசை நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளருக்கு துணையாக அவரின் நண்பராக செல்வது போன்ற சேவைகளை ஷோஜி வழங்கி வருகிறார்.
பாலியல் செயல்பாடுகளைத் தவிர வாடிக்கையாளர்கள் எதை செய்யச் சொன்னாலும் சொல்வதை மட்டுமே செய்வது அவரது கோட்பாடாக வைத்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு ஷோஜி அளித்த பேட்டியில், கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்பது, குளிரில் பல மணிநேரம் நிற்பது போன்ற பல்வேறு கடினமான சூழலையும் தான் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1,000 கோரிக்கைகளை பெறும் ஷோஜி, 2 முதல் 3 மணிநேரத்துக்கு அதிகபட்சமாக ரூ. 17,000 வரை கட்டணமாக பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.