முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

34 இயக்குநர்கள் அறிமுகம்

ஒளிப்பதிவாளர் செழியன் 'தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்காலத் திரையுலகப் படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறார்.

Updated On : 2 பிப்ரவரி 2026, 11:11 pm IST
பகிர்:

ஒளிப்பதிவாளர் செழியன் 'தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்காலத் திரையுலகப் படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறார். இந்தப் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட 34 மாணவப் படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் செழியன் பேசும் போது, ''நான் உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன், ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன்.

அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டுக்கு முன் நிற்கிறார். அப்போது அவர் 'அதிலிருந்து ஒரு கேமராவைக் கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டுத் தருகிறேன்' என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனைக் கொடுக்க முடியாது என்கிறார்கள்.

Advertisement

Advertisement

அவர் அன்றிரவு அந்தக் கண்ணாடிக் கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார். அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அவர் ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால், அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால், அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.

இப்பொழுது எல்லா நேரங்களிலும் ஏசியில் தான் இருக்கிறோம், இயங்குகிறோம். சிறிது நேரம் புல்வெளியிலும் காலார நடக்க வேண்டும். மூன்று கோடி முதல் 300 கோடி ரூபாய் வரை படம் எடுங்கள். அவை அனைத்தும் வெற்றி பெறட்டும். 20 லட்சம் ரூபாய் முதலீட்டிலும் சில திரைப்படங்கள் உருவாகட்டும். இத்தகைய முயற்சிக்கு இங்குள்ள பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 10 அல்லது 12 நாள்கள் ஒதுக்கீடு செய்து ஆதரித்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments