AP
உலகம்

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரைவு அறிக்கையை ஏற்ற ஹமாஸ்!

போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக்கொண்டதாக தகவல்...

DIN

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டதாக அதிகாரிகள் இன்று(ஜன. 14) தெரிவித்துள்ளனர்.

போர்நிறுத்தத்துக்கான இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இனி வரும் நாள்களில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT