எலான் மஸ்க் கோப்புப் படம்
உலகம்

திறமையாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கும் எலான் மஸ்க்!

மென்பொருள் பொறியாளர்களின் பள்ளிப்படிப்பு, பட்டம் குறித்து கவலையில்லை; திறமை மட்டும் போதும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு

DIN

தனது நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ள்ளார்.

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்காவின் செயல்திறன் மேம்பாட்டுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ``நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளராகவும், பல்வேறு விதமான செயலிகளையும் உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை code@x.com-க்கு அனுப்பி, எங்கள் நிறுவனத்தில் இணைந்து விடுங்கள்.

நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? பட்டம் பெற்றீர்களா? பெயர்பெற்ற பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா? என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.

உங்கள் திறமையை மட்டும் எங்களிடம் காட்டுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்தப் பதிவை வரவேற்பதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். திறமையை மட்டும் வைத்து பணிக்கு ஆள்சேர்ப்பு நடத்துவது சிறந்தது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, டிக்டாக் செயலியை எலான் மஸ்க் வாங்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், எலான் மஸ்க்கின் இந்த வேலை அறிவிப்பானது வதந்திக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். புதிய செயலியை வாங்குவதால், அதற்கு ஆள்சேர்ப்பு நடத்துவதாகக் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திகார் சிறையில் உள்ள உமர் காலிதுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் மேயர்! பாஜக கண்டனம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்ஜிஆர் பெயர், படம் நீக்கம்: இபிஎஸ் கண்டனம்

வார பலன்கள் - மீனம்

இந்திய வரலாற்றில் சவாலான நேரங்களில் துணிச்சலுடன் செயலாற்றியவர் ராம்நாத் கோயங்கா: சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

வார பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT