PTI
உலகம்

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல்!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா! -அதிபர் டிரம்ப் உத்தரவு

DIN

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உள்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அந்த அமைப்பு பெறும் மொத்த வருவாயில் 19 சதவிகிதமாகும்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவிருக்கும் உத்தரவில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதால், சர்வதேச அளவில் பல்வேறு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடக்கம்!

பஞ்சாபில் வெள்ளம்: ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா பேச்சு

பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம்! பாகிஸ்தான் பிரதமரும்...

பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT