அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 
உலகம்

முதல் ஒரு வாரத்தில் டொனால்ட் டிரம்ப் சொன்ன பொய்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் ஒரு வாரத்தில் சொன்ன பொய்கள் பற்றி..

DIN

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஐந்து நாள்களில், அவர் சொன்ன பல விஷயங்கள் பொய்யானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகள், செய்தியாளர் சந்திப்புகளில் அவர் பங்கேற்று வாய்க்கு வந்ததைப் பேசியிருப்பதாகவும், அதில் பல தகவல்கள் பொய்யானவை என்றும் கூறப்படுகிறது.

தேர்வு முடிவுகளைப் பற்றி டிரம்ப் சொன்னது...

தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருப்பதாக வர்ணித்து அவரையே புகழ்தள்ளிக்கொண்டார். அதோடு, அமெரிக்க மக்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை வழங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், உண்மை நிலவரம் அப்படியில்லை என்கிறது.

அசோசியேட் பிரஸ் வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவு நிலவரத்தில், டிரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகள் 312. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் பெற்ற வாக்குகள் 226. இதனை வாக்குச் சதவீதத்தில் சொல்ல வேண்டும் என்றால், டிரம்ப் 49.9 சதவீதமும், ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால், இந்த குறைந்த இடைவெளிக்கும், டிரம்ப் சொல்லும் மகத்தான வெற்றிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல. ஆனால் உண்மையில், 2020ஆம் ஆண்டு டிரம்ப் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்திருந்தார்.

அதுபோல, அவருக்கு இளைஞர்களின் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளிக்கையில் கூறியிருந்தார். அதுவும் பொய்யாம்.

18 - 29 வயதுடையவர்களிடையே 4 சதவீத புள்ளிகளும் 30 - 44 வயதுடையவர்களிடையே 3 சதவீதப் புள்ளிகளும் ஹாரிஸ்தான் பெற்றிருக்கிறார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளிகளே டிரம்புக்குக் கிடைத்திருக்கிறது என ஏபி தரவு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT