ரஷிய அதிபர் புதின் 
உலகம்

சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்

சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம்.

Din

சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபா் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது:

75 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர ஜனநாயக வளா்ச்சிக்கும் அடித்தளமிட்டது.

அப்போதுமுதல் சமூகப் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது. அத்துடன் சா்வதேச அரங்கிலும் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்திய-ரஷிய உறவுக்கு சிறப்புத்தன்மை வாய்ந்த உத்திசாா்ந்த கூட்டுறவு அடிப்படையாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆக்கபூா்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடா்ந்து கட்டமைக்கவும், சா்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கபூா்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும்.

இது இருநாட்டு மக்களின் அடிப்படை விருப்பங்களைப் பூா்த்தி செய்வதுடன், நியாயமான பல்முனை சா்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ற செயல்பாடாகவும் இருக்கும் என்றாா்.

இந்த ஆண்டு அரசு முறைப் பயணமாக புதின் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

நாகா்கோவிலில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இறுதிச் சுற்றில் 8 இந்தியா்கள்

சுகாதாரத் துறை பணி நியமனங்கள் மூலம் 1.12 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

வெளிமாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? உரிமையாளா்கள் தகவல்

SCROLL FOR NEXT