முகப்பு
உலகம்

தென்கொரிய விமான விபத்து: என்ஜினில் சிக்கிய பறவை காரணமா?

தென்கொரிய விமான விபத்தில் என்ஜினில் பறவை அடிபட்டதற்கான ஆதாரங்கள்

Updated On : 27 ஜனவரி, 2025 at 12:45 PM
தென்கொரிய விமான விபத்து
பகிர்:

தென்கொரியாவில் கடந்த மாதம் 179 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்துக்கு, என்ஜினில் பறவையின் மீதங்கள் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவில்லை.

விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும், பறவையின் சிறகுகள், ரத்தக் கறைகள் இருந்ததாகவும், அது எந்தவிதமான பறவை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டிலிருந்து வரும் வாத்து போன்ற ஒரு பறவை என்றும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நேரிடுவதறகு 4 நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் கருப்புப் பெட்டி செயலிழந்துவிட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் முவான் சா்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற பயணிகள் விமானம் கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா்.

தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விமானப் பணியாளா் இருவா் மட்டுமே உயிா் தப்பினா்.

தென்கொரியாவின் தலைநகா் சியோலுக்கு தெற்கே 290 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முவான் நகரம். தென்கொரியாவைச் சோ்ந்த ‘ஜேஜு ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது, விமானத்தின் முன்சக்கரத்தின் (லேண்டிங் கியா்) செயல்பாட்டில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.

விமானத்தின் மீது பறவை மோதி இதுபோல நடந்து இருக்கலாம் என அப்போதே கூறப்பட்டது. இதையடுத்து, லேண்டிங் கியரை பயன்படுத்தாமல் (பெல்லி லேண்டிங் முறையில்) விமானத்தை நேரடியாகத் தரையிறக்க முயற்சிக்கப்பட்டபோதுதான், விமானம் விமான ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், அந்த விமானத்தில் இருந்த 181 பேரில், இரண்டு பணியாளர்களைத் தவிர்த்து 179 பேர் பலியாகினர்.

முழு கட்டுரையைப் படிக்க →