முகப்பு
உலகம்

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி 2025, 1:00 am IST
பகிர்:

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. அந்த விண்கல் தாக்குவதால் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது. இருந்தாலும், அது ஏதாவது ஒரு முக்கிய நகரில் விழுந்தால் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும். அது பூமியில் மோதும்போது ஏற்படும் சக்தி 8 மெகாடன் டிஎன்டி அளவுக்கு (ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டைப் போல் 500 மடங்கு) இருக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments