பள்ளி மாணவிகளுக்கு.. IANS
உலகம்

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி! ரஷியாவில்

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ரஷியாவில் நடைமுறை

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும், இது அவர்களது பிள்ளைகளை வளர்க்க உதவும் என்றும் பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பானது, ரஷியாவின் பத்து மாகாணங்களில் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாகக் குறைந்திருப்பதை சரி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம், கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போது பெண்களுக்கு மட்டுமே இரு பொருந்தக் கூடியதாக இருந்துள்ளது.

ஒரு நாட்டின் மக்கள் தொகை நிலைத்து இருக்க வேண்டும் என்றால், அங்கு சராசரியாக ஒரு பெண் 2.05 குழந்தைகள் பெற வேண்டும். ஆனால், கடந்த 2023 முதல், அந்நாட்டின் மக்கள் தொகை சராசரி அதாவது ஒரு பெண் 1.41 குழந்தைகளுக்கும் குறைவாக பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.இதனால்தான், ரஷிய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

ஆனால், ரஷிய அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறார் பருவ கருவுறுதல் அதிகரிப்பது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் அதிபர் விளாதிமீர் புதின், நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறார். அப்போதுதான், ராணுவத்தை பலப்படுத்துவது மற்றும் எல்லை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

In Russia, in view of the declining birth rate, a program to provide financial assistance to pregnant schoolgirls has been implemented in several regions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

SCROLL FOR NEXT