கோப்புப் படம் 
உலகம்

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின் ஷினாவாரி சர்காரி பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூலை 19) பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், ராணுவ மேஜர் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருப்பினும், அப்பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், அங்குள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

Five terrorists were killed in an operation by counter-terrorism forces in Pakistan's Khyber Pakhtunkhwa province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிப்பு டிரெண்டிங்கில் பாஜக! காங்கிரஸுடன் மோதல்!

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT