முகப்பு
உலகம்

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.

Updated On : 20 ஜூலை, 2025 at 9:48 AM
Photo credit: AP
பகிர்:

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.

ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்த ஒரு அலகில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், தொழிலாளி ஒருவர் பலியானதாகவும் அரசுக்கு சொந்தமான ஈரான் செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தபோதிலும் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற துணைத் தலைவர் அலி நிக்சாத் ஞாயிற்றுக்கிழமை சில தொழிலாளர்களும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தினார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1912 இல் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இது நாட்டின் எரிபொருளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு தினமும் 5,200,000 பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படுகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A fire at Iran's oldest and largest refinery in the southwest killed one person, state media reported Sunday.

முழு கட்டுரையைப் படிக்க →