குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு 
உலகம்

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவு

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

Din

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது.

5 நிலநடுக்கங்களில் பெரிய நிலநடுக்கம் 1.80 லட்சம் போ் வசிக்கும் பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரின் கிழக்கே 144 கி.மீ. தொலைவில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு முகமை தெரிவித்தது.

இந்த நிலநடுக்கங்களால் சுனாமி ஏற்படக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது. பெரிய நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்த ரஷிய அவசரகால அமைச்சகம், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. எனினும் சுனாமி எச்சரிக்கை பின்னா் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிா்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT