உலகம்

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது.

Din

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: “ஜூன் 25 முதல் பெய்துவரும் கனமழை தொடா்பான சம்பவங்களில் 143 போ் உயிரிழந்துள்ளனா்; 488 போ் காயமடைந்துள்ளனா். கன மழை பாதிப்புப் பகுதிகளில் இருந்து இந்த வாரம் மட்டும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அந்த ஆணையம் தெரிவித்தது.

பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநா் இா்ஃபான் அலி கதியா கூறுகையில், பெரும்பாலான மரணங்கள் களிமண் வீடுகள், பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்ததாலும், மின்சாரம் தாக்கியதாலும், நீரில் மூழ்கியதாலும் ஏற்பட்டதாகக் கூறினாா்.

இத்துடன், இந்தப் பருவமழை காரணமாக பாகிஸ்தான் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 258-ஆக அதிகரித்துள்ளது.

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

SCROLL FOR NEXT