தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் மர்ம நபர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் இன்று காலை பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாவலர்கள் நால்வரும், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது,
பயங்கரவாத துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
தாய்லாந்துக்கும்-கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்போக்கு இதற்குக் காரணமாக என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.