பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவியுடன் டிரம்ப் AP
உலகம்

நான் இல்லையென்றால் இப்போது 6 போர்கள் நடந்துகொண்டிருக்கும்: டிரம்ப் பேச்சு

போர்களை நிறுத்தியது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு...

இணையதளச் செய்திப் பிரிவு

இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் பற்றி டிரம்ப், ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், "தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் மற்றும் கம்போடியாவின் பிரதமரிடம் இப்போதுதான் பேசினேன். என்னுடைய தலையீட்டிற்குப் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்தையும் அமைதியையும் எட்டியுள்ளன என்பதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இரு நாடுகளுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு எனது வர்த்தகக் குழுவிற்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். 6 மாதங்களில் நான் பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறேன். சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டிரம்ப் கூறுகையில்,

"நாங்கள் 6 போர்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதைதான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். ஒருவரையொருவர் கொல்லும் நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. எனவே, வர்த்தகம் மூலமாக போரை நிறுத்தியுள்ளோம்.

நான் இல்லாதிருந்தால் இப்போது 6 பெரிய போர்கள் நடந்து கொண்டிருக்கும். இந்தியா பாகிஸ்தானுடன் சண்டையிட்டிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி நாடுகளின் போரை நிறுத்தியது பெரிய விஷயம்" என்று பேசியுள்ளார்.

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம்

தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், போரின் 5 ஆவது நாளான நேற்று(ஜூலை 28) இரு நாட்டுத் தலைவர்களுடன் மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சீனா, அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், எந்த நிபந்தனையுமின்றி போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று(ஜூலை 29) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

US President Donald Trump has said that he has stopped six wars so far and is proud to be a President of peace.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT