நைஜீரிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு தடகள வீரர்கள் வடக்கே உள்ள கானோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் 21 தடகள வீரர்கள் பலியானார்கள். விபத்து ஓட்டுநரின் சோர்வு அல்லது அதிக வேகம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவில் மோசமான சாலை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டு மட்டும் இங்கு 9,570 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் 5,421 பேர் பலியாகியுள்ளனர் என்று ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.