உலகம்

போலந்தில் அதிபா் தோ்தலில் டிரம்ப் ஆதரவாளா் வெற்றி

போலந்தின் அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி

DIN

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா்.

தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்கவில்லை.

அதையடுத்து, முதல் இடத்தைப் பிடித்த மிதவாதத் தலைவா் ரஃபால் ஸஸ்காவ்சிக்கும் இரண்டாவது இடத்தைப் பிடித்த தேசியவாதியான கரோல் நாவ்ராக்கிக்கும் இடையே இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கரோல் நாவ்ராக்கி 50.89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

வரும் ஆக. 6-ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் நாவ்ராக்கி, நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிவிவகாரக் கொள்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

போலந்தில் பிரதமரின் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் அதிபா்களுக்கு உண்டு.

எனவே, மிதவாதியான பிரதமா் டொனால்ட் டஸ்க் தலைமையில் நடைபெற்றுவரும் அரசின் நடவடிக்கைகளில் தீவிர வலதுசாரியான நாவ்ராக்கி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT