உலகம்

இஸ்ரேலில் இருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்

காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

DIN

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது:

இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் கிரெட்டா தன்பர்க் பிரான்ஸூக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் தனது சொந்த நாடான ஸ்வீடனை நோக்கிச் சென்றார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அங்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்தும், ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு நிவாரணக் கப்பலொன்றை காஸாவை நோக்கி கடந்த வாரம் அனுப்பியது.

இந்தக் கப்பலில், கிரெட்டா தன்பர்க் உள்பட 12 தன்னார்வலர்கள் பயணித்தனர்.

இருந்தாலும், காஸாவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அந்தக் கப்பலை இஸ்ரேல் படையினர் சிறை பிடித்தனர். மேலும், அதில் இருந்த தன்னார்வலர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT