கோப்புப் படம் 
உலகம்

ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

ஈரானில் ரஷியா 8 புதிய அணு உலைகளை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில் ரஷியாவல் 8 புதிய அணு உலைகள் கட்டப்படும் என நேற்று (ஜூன் 9) அந்நாட்டின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் முஹம்மது எஸ்லமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 8 அணு உலைகளில் 4 உலைகள் ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள புஷேர் மாகாணத்தில் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், புஷேர் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 2,3 உலைகள் ஈரான் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவின் உதவியோடு கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்ட புஷேர் அணுமின் நிலையம் ஈரானில் நாட்டில் இயங்கிவரும் முதல் மற்றும் ஒரே அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

தெய்வீக அனிமேஷன்: ரூ.53 கோடி வசூலித்த மகாவதாரம் நரசிம்மா!

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

SCROLL FOR NEXT