கோப்புப் படம் 
உலகம்

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்துள்ளது.

DIN

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது.

உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற்று (ஜூன் 11) வெடித்துள்ளது. அந்த எரிமலையின் வடக்கு துவாரத்தின் வழியாக வெளியேறிய எரிக்குழம்புகள் சுமார் 330 அடி உயரத்துக்கு சீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த 2024-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 25வது முறையாக இந்த எரிமலை சீற்றம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக அவ்வப்போது சீற்றம் பெற்று, அதிகப்படியான எரிக்குழம்புகளை வெளியேற்றும் இந்த எரிமலை அதற்குப் பின் சில நாள்களுக்கு சீற்றங்கள் எதுவுமின்றி காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கிலாயூயா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எனும் அபாயமுள்ளதால், அதனை ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT