உலகம்

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

DIN

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வரும்நிலையில், அதனை ரஷியா கண்டுகொள்வதாய் இல்லை.

இந்த நிலையில், 3 ஆண்டுகாலப் போரில் ரஷிய வீரர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடன் 2022, பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து ரஷியா போர் நிகழ்த்தி வரும்நிலையில், இதுவரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களில் 2.5 லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகமும் வியாழக்கிழமையில் தெரிவித்தது.

மேலும், உக்ரைன் வீரர்கள் 45,100 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3.9 லட்சம் பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி பிப்ரவரி மாதத்தில் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT