கோப்புப் படம் 
உலகம்

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்?

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது...

DIN

இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நேற்று (ஜூன் 13) தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் போர் விமானங்கள் மூலமாகவும், ஈரானுக்குள் கடத்தப்பட்ட ட்ரோன்கள் மூலமாகவும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் விமானப் படைக்குச் சொந்தமான, 5-ம் தலைமுறையைச் சேர்ந்த எஃப் - 35 ரக இரண்டு போர் விமானங்களை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம், சக்தி வாய்ந்த போர் விமானங்களாகக் கருதப்பட்ட எஃப் - 35 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய முதல் நாடு ஈரான் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த போர் விமானங்களின் விமானிகளின் நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எஃப் - 35 லைட்டினிங் 2 ரக போர் விமானங்கள், கடந்த 2016-ம் ஆண்டு இஸ்ரேலிய விமானப் படையில் இணைக்கப்பட்டன.

இத்தகைய, அதிநவீன விமானங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதித்த ஒரு சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. தோல்வி; டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஏழைகளுக்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

பட்ஜெட்டில் ஏன் கேரளத்தைப் புறக்கணித்தீர்கள்? விளக்கமளிக்க வேண்டும்! - பினராயி விஜயன்

87 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று வரலாறு படைத்த அல்கராஸ்!

தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT