இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல் AP
உலகம்

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பது பற்றி...

DIN

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணைத் விழுந்ததில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

இரு நாடுகளின் மோதலால் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணை விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்ததாவது:

“ஈரானின் ஏவுகணை விழுந்ததில் தூதரகத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தூதரக நடவடிக்கைகளை இன்று ஒருநாள் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றியும் நூறு மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் ஏவுகணைத் தாக்குதலில் கடுமையான சேதமடைந்த விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

SCROLL FOR NEXT