இஸ்ரேல்-ஈரான் போர் AP
உலகம்

ஈரான் வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்..! -டிரம்ப்

ஈரான் வான்வெளி அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தகவல்...

DIN

ஈரான் வான்வெளி இப்போது முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 17) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடிக்கிறது. இந்த நிலையில், ஈரானின் வான் பாதுகாப்பு தளவாடங்களெல்லாம் அமெரிக்க தொழில்நுட்பத்தின்முன் ஒண்ணுமேயில்லை என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் டிரம்ப்.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய இஸ்ரேல், ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கிலுள்ள இவ்விரு நாடுகளும் படுதீவிரமாக சண்டையிட்டு வருவதால், இருநாட்டு தலைநகரில் இருந்தும் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருப்பதுன் பதுங்குமிடங்கள், நிலத்துக்கடியில் உள்ள பாதுகாப்பு தளங்களில் தஞ்சமடையுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

29 ஆண்டுகளுக்குப் பின்... தொடர்ந்து 3 நாள்கள் கனமழை!

தமிழ் தலைவாஸ் முதல்முறையாக கோப்பையை வெல்லும்..! துணை கேப்டன் பேட்டி!

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT