அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர். 
உலகம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதைப் பற்றி...

DIN

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் அதிபர் டிரம்ப் வெளியேறினார்.

இந்த நிலையில், 5 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று(ஜூன் 18) வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர் டிரம்ப், அவருடன் மதிய உணவு விருந்தில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் மற்றும் அசீம் முனீர் இடையேயான சந்திப்பு, பொது அட்டவணையின்படி, வெள்ளை மாளிகை அமைச்சரவை அறையில் பிற்பகல் 1 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தனது அமெரிக்கப் பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

SCROLL FOR NEXT